நடிகை அசினுக்கும் அமெரிக்ககாவில் வசிக்கும் இளைஞர் ஒருவருக்கும் கடந்த சில வருடங்களாக காதல் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதனால்தான் அசின் புதிய படங்களில் நடிக்க மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. அசின் தற்போது புதிதாக எந்த படங்களிலும் நடிக்கவில்லை. விரைவில் தமிழ், தெலுங்கில் ஏதாவது ஒரு படத்தில் நடிக்கலாம் என்றும் சொல்லப்பட்டது.
இதனிடையே அமெரிக்க இளைஞரை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதால்தான் அசின் புதிய படங்களில் நடிப்பதை தவிர்த்து வருவதாகவும், இவர்களது காதலுக்கு இருவரது பெற்றோர்களும் சம்மதித்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
விஷயம் வெளியில் வந்து விட்டது, விரைவில் அசினிடமிருந்து மறுப்பு அறிக்கை வராமலா போய் விடும் ?