2010ம் ஆண்டு வெளிவந்த ‘தமிழ்ப் படம்’ என்ற சூப்பர் ஹிட் படம் மூலம் தமிழ்த் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் சி.எஸ். அமுதன்.
அவருடைய அடுத்த படம் ‘ரெண்டாவது படம்’. இதன் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்ட படத்தின் நாயகர்களில் ஒருவரான விமல் முதலில் பேசும் போது, “ ரெண்டாவது படம்’ சமூக சிந்தனையை தூண்டற அளவுக்கு, வாழ்க்கையில எப்படி நடக்கணும்கற அக்கறையை கொடுக்கற அளவுக்கு கருத்துள்ள படமா இருக்கும் ,” என்றார்.
அடுத்து பேசிய மற்றொரு ஹீரோவான அரவிந்த், “இந்த படத்துல கதைலாம் ஒண்ணுமில்ல. நார்மலான ஒரு படம். ரெண்டாவது படம்னு ஒரு டைட்டில் வச்சிருக்கிற படம், டைட்டில்னா ஒரு கருத்து இருக்கும், அதுக்குப் பின்னாடி ஒரு மெசேஜ் இருக்கும். இந்த படத்துல மெசேஜ்லாம் கிடையாது,” எனப் பேசினார். (விழாவுக்கு படத்துல அவர் நடிச்ச மளிகைக் கடைக்காரர் கெட் அப்-ல வந்திருந்தாரு. ஒரு வேளை ‘குடிகாரனா’ நடிச்சிருந்தால் ‘போதை’ல வந்திருப்பாரோ ?)
இவர்களிருவரின் இரு வேறான பேச்சைக் கேட்டு ஆடிப் போன இயக்குனர் சி.எஸ். அமுதன் நன்றியுரையின் போது , “ ரெண்டு பேரும் வந்து பேசினீங்க, ஒருத்தன் வந்து படத்துல பயங்கர கருத்து இருக்கும், வாழ்க்கைன்னா இப்படித்தான் வாழணும்னு சொன்னீங்க, இன்னொருத்தன் இதுல கதையே ஒண்ணுமே இல்லங்கறீங்க.
கேக்கறவங்க என்ன நினைப்பாங்க ? உங்களுக்குள்ள பேசிக்கிட்டாவது வரக்கூடாதா ? ” என அவர்களைப் பார்த்துக் கேட்க அரங்கமே சிரிப்பலையால் அதிர்ந்தது.
ஆஹா….தியேட்டர்ல இவங்க போட்ட டிரைலரை விட, இந்த பேச்சு டிரைலர் சூப்பரா இருக்கேப்பா…
ஆரம்பிச்சிட்டாங்கப்பா….ஆரம்பிச்சிட்டாங்க…அடுத்த ‘ரெண்டாவது தமிழ்ப் படத்துக்கு’ ரெடியா இருங்க…