விஜய் நடித்த ‘ப்ரியமுடன்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வின்சென்ட் செல்வா. தொடர்ந்து ‘இரணியன்’, ‘யூத்’, ‘ஜித்தன்’, ‘பெருமாள்’ போன்ற படங்களை இயக்கினார்.
தற்போது புதுமுகம் யுவராஜ், தீப்தி, பிரகாஷ்ராஜ், ஜெயபிரகாஷ் மற்றும் பலர் நடிக்கும் ‘துள்ளி விளையாடு’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
இப்படத்தின் இசையை விஜய் மும்பையில் ‘தலைவா’ படப்பிடிப்பில் இருக்கும் போது வெளியிட்டார். இயக்குனர் வின்சென்ட் செல்வா, தயாரிப்பாளர் கோவிந்தராஜ், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நாயகன் யுவராஜ் ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.
“எனக்கு வெற்றிப் படத்தைக் கொடுத்த உங்களுக்கு இந்த படம் நல்ல வெற்றியைத் தரட்டும்,” என விஜய் இயக்குனர் வின்சென்ட் செல்வாவை வாழ்த்தினார்.
‘துள்ளி விளையாடு’ காமெடி கலந்த த்ரில்லர் கதையாக உருவாகி வருகிறது.