மணிவண்ணன், இயக்கத்தில் சத்யராஜ் நாயகனாக நடிக்கும் அமைதிப்படை 2 – நாகராஜ சோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ படத்தின் நாயகி யார் என்பதை தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
இது சம்பந்தமாக படத்தின் தயாரிப்பாளர்களான சுரேஷ் காமாட்சி, ரவிச்சந்திரன் இணைந்து விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
“எங்கள் படத்தில் நடித்திருக்கும் வர்ஷா அஷ்வதியின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றதை அறிந்தோம்.
அச்சந்திப்பில் தான் தான் அமைதிப்படை படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பதாக பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்துள்ளார் என்பதையும் அறிய வந்தோம்.
எங்கள் படத்தில் கதாநாயகிகள் கோமல் ஷர்மாவும், மிருதுளாவும் மட்டுமே. வர்ஷா ஒரு கேரக்டர் ரோலில் மட்டுமே நடிக்கிறார். அதுவும் படத்தில் சில காட்சிகளே வந்து போகும் பாத்திரம் மட்டுமே. இவர், தான்தான் கதாநாயகி என்று பேட்டி அளிப்பது எங்களது வியாபார ரீதியான அணுகு முறைகளுக்கு குந்தகம் விளைவிப்பதாக உள்ளது.
எனவே நண்பர்கள் உள்ளதை உள்ளபடி எழுதும்படி கேட்டுக்கொள்கிறோம். வேண்டுமானால் அவர் மற்ற படங்களில் கதாநாயகி என்று சொல்லிக்கொள்ளட்டும்,” என தெரிவித்துள்ளனர்.