இன்று மார்ச் 15, 2013 வெளியாகும் படங்களில் பாலாவின் பரதேசியும், ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில் அவருடைய தம்பி திலீபன் அறிமுகமாகும் வத்திக்குச்சி படமும் அதிகப்படியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இன்று வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்.
பரதேசி
ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் வழங்க பி ஸ்டுடியோஸ் பாலாவின் பரதேசி. இசை – ஜிவி பிரகாஷ்குமார், பாடல்கள் – வைரமுத்து. ஒளிப்பதிவு – செழியன், அதர்வா, வேதிகா, தன்ஷிகா, ஜெர்ரி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
வத்திக்குச்சி
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் வழங்க ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில் கின்ஸ்லின் இயக்கியிருக்கும் படம். இசை – ஜிப்ரான். புதுமுக நாயகன் திலீபன், அஞ்சலி, சரண்யா பொன்வண்ணன், சம்பத் ராஜ், ஜெயபிரகாஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
கரும்புலி
மெட்ராஸ் பிலிம் அகாடமி தயாரிப்பில் பரமேஷ்வர் இயக்கியிருக்கும் படம். இசை – பவன். மகேஷ் ராஜா, வர்ஷா, பிராச்சி, மௌலி குமார், அருள், சதக், சூரிய கிரண் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.


