‘சிலம்பாட்டம்’ சரவணன் படத்தில் கௌதம் கார்த்திக்

kadal stills_00013‘கடல்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக். இவர் அடுத்து  பிரபல ஒளிப்பதிவாளரும், சிம்பு ‘சிலம்பாட்டம்’ படத்தை இயக்கிய சரவணன் படத்தில் நடிக்கப் போகிறார்.

கடல் படம் முடிவடையும் நிலையில் இருக்கும் போதே கௌதம் பல இயக்குனர்களிடம் கதைகளை கேட்டு வந்தார் என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில் சரவணன் சொன்ன ஒரு கல்லூரி சம்பந்தப்பட்ட காதல் கதை கௌதமுக்கு மிகவும் பிடித்துப் போனதால் இந்த படத்தில் நடிக்க சம்மதித்திருப்பதாகத் தெரிகிறது.

படத்தின் கதாநயாகிக்கான தேடலும் ஆரம்பித்து விட்டது. இளம் நாயகியரில் மொத்தமாக யார் கால்ஷீட் தருகிறார்களோ அவர்தான் இந்த படத்தின் நாயகி.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல்  ஆரம்பமாகிறது.

மற்ற விவரங்கள்  விரைவில்…

Read Previous

இன்றைய ரிலீஸ்…

Read Next

பரதேசி – விமர்சனம்

Most Popular