அர்ஜுன் இயக்கும் புதிய படம்…

arjunரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு அர்ஜுன் புதிய படம் ஒன்றை இயக்கி நடிக்கிறார்.

நடிகரான அர்ஜுன் ‘சேவகன்’ படம் மூலம் இயக்குனராகவும் ஆனார். தொடர்ந்து சில படங்களை இயக்கிய அர்ஜுன் கடைசியாக 2006ம் ஆண்டு வெளிவந்த ‘மதராஸி’ படத்தை இயக்கினார்.

ஏறக்குறைய ஏழு வருடங்கள் கழித்து தற்போது புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் இப்படம் தயாராக உள்ளது.

படம் குறித்து அர்ஜுன் கூறுகையில், “இந்த படம் வழக்கமான காதல் ஆக்ஷன் படமாக இருக்காது. இன்றைய காலகட்டத்துக்குத் தேவையான அவசியமான ஒரு கருத்தை கதைக்களமாகக் கையில் எடுத்திருக்கிறேன்,” என்றார்.

20 கோடிக்கும் மேல் செலவழித்து பிரம்மாண்டமாக உருவாக உள்ள இப்படத்தைத் தயாரிப்பதும் அர்ஜுன்தான்.

விரைவில் மற்ற விவரங்கள்…

 

 

Read Previous

கண் பேசும் வார்த்தைகள் – விமர்சனம்

Read Next

‘பாலிவுட்டின் அடுத்த ஸ்ரீதேவி’ தமன்னா !