தோல்வி என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதற்கு இயக்குனர் கௌதம் மேனன் சமீபத்திய உதாரணம்.
‘மின்னலே’ தொடங்கி ‘நீதானே என் பொன்வசந்தம்’ படம் வரை காதலை கவிதைத்தனமாக சொல்வதில் இளைஞர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற இயக்குனர்.
ஒரு காலத்தில் இவர் சொன்னதைக் கேட்ட நடிகராக இருந்தவர் சூர்யா. இப்போது சூர்யா சொல்வதைக் கேட்டு செய்யும் இயக்குனராக இருக்கிறாராம் இயக்குனர் கௌதம் மேனன்.
கௌதம் மேனன், சூர்யா மீண்டும் இணையும் படத்திற்கு ‘துருவ நட்சத்திரம்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
படத்தின் டைட்டில் முதல் கொண்டு, இசையமைப்பாளர் என அனைத்தையும் சூர்யாதான் முடிவு செய்கிறாராம்.
இதை கொஞ்சம் நாசூக்காக வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் கௌதம் மேனன். “அனைத்தையும் சூர்யா முடிவு செய்துவிட்டார் ”என சொல்லியிருக்கிறார்.
‘காக்க காக்க’ படத்தில் சூர்யா ஹீரோவாக நடிப்பதற்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்ததே ஜோதிகாதான் என்றும் ஒரு பேச்சு உண்டு.
இப்போது நிலைமை ரொம்பவே மாறி விட்டது.
டோன்ட் ஒர்ரி கௌதம், உங்களுக்கும் ஒரு டைம் வரும்…