பிரணவ் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.கே. இளவரசன் தயாரித்து வரும் படம் ‘வாலு’.
தம்பி ராமையாவின் உதவியாளர் தேசிகா இந்த படத்தை இயக்குகிறார். அகில், சரண்யா நாக், தம்பி ராமையா, கோவை சரளா, சோனா, ஜோ மல்லூரி, ‘பசங்க’ சிவகுமார், பாவா லட்சுமணன், டைரக்டர் சாய் ரமணி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் இசையமைப்பாளர் செல்வகணேஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதுகிறார்.
சென்னை பீமண்ணன்பேட்டையில் வாழ்ந்த வாலு என்கிற குணசேகரனின் வாழ்க்கையில் ஏற்பட்ட காதல் , அதனால் ஏற்பட்ட பிரச்சனைகள், தொடர்ந்து நிகழ்ந்த அசம்பாவிதங்கள், திடுக்கிடும் திருப்பங்கள் கொண்ட உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அனைவரையும் கவரும் விதத்தில் திரைக்கதை அமைத்து ‘வாலு’ படத்தை உருவாக்கி வருகிறார்கள்.