‘காக்க காக்க’, ‘வாரணம் ஆயிரம்’ படங்களைத் தொடர்ந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் – சூர்யா இணையும் புதிய படம் ‘துருவ நட்சத்திரம்’.
தனது சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான ஃபோட்டோன் கதாஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்து இயக்குகிறார் கௌதம்.
வெற்றிகரமான காம்பினேஷன் என ரசிகர்களிடம் பெயரெடுத்துள்ள கௌதம் மற்றும் சூர்யா சில வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைவதால் இப்படத்திற்கு நிறையவே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்திற்குப் பிறகு கௌதம் மேனனுடன் ஏ.ஆர். ரகுமான் மீண்டும் இணைகிறார்.
இன்று இப்படத்தின் டைட்டிலுக்கான ‘லோகோ’ வெளியிடப்பட்டு அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியுள்ளது.
மற்ற நடிக, நடிகையர் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
மே 2 முதல் படம் துவங்குகிறது.