‘சேட்டை’ மாதிரி இனி நடிக்க மாட்டேன் – சந்தானம்

settai_00016‘சேட்டை’ படத்தில் இடம் பெற்ற சந்தானத்தின் நகைச்சுவைக் காட்சிகள் அனைத்துமே நம்மை முகம் சுளிக்க வைத்த ஒன்று.

நகைச்சுவை என்ற பெயரில் நாற்றமடிக்கும் காட்சிகளே அந்த படத்தில் இடம் பெற்றிருந்தன. தமிழ் ரசிகர்களும் படத்திற்கு மாபெரும் தோல்வியைத் தந்தனர். இப்படத்தின் தோல்வி முன்னணி நகைச்சுவை நடிகராக உள்ள சந்தானத்தை நன்றாகவே யோசிக்க வைத்து விட்டது.

இதைப் பற்றி அவர் கூறுகையில், “ சேட்டை’ படத்துல நான் கொஞ்சம் எல்லையை தாண்டிட்டேன். காலேஜ் பொன்னுங்க எல்லாரும் என் காமெடிய ரசிச்சிட்டு வர்ற நேரத்துல அந்த படத்துல வந்த மாதிரியான காமெடிய நான் பண்ணியிருக்கக் கூடாது.

இனி, பெண்கள் முகம் சுளிக்கிற அளவு நடிக்க மாட்டேன். யாரையுமே கொச்சைப்படுத்தாத காமெடிதான் இனி பண்ணுவேன். இனிமே, நான் எப்டிப்பட்ட பாதையில போகணும்கறதுல கவனமா இருக்கேன் , ” என்றார்.

ம்ம்…தோல்வின்னு வரும் போதுதான் பயம் வருது….

Read Previous

கல்லூரி கதை ‘குளுகுளு நாட்கள்’

Read Next

குட்டிப்புலி – விமர்சனம்