கல்லூரி கதை ‘குளுகுளு நாட்கள்’

kulu kulu natkal_00007ரேத்தக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் படம் ‘குளுகுளு நாட்கள்.

புதுமுகங்கள் ஸ்ரீஜித் விஜய், ஹரிஷ், ஷாஃபி, அர்ஜூன் , மாளவிகா, சுபிக்ஷா, தீபா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். எம். எஸ். பாஸ்கர், யுவராணி, டி பி. கஜேந்திரன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

படத்தின் இயக்குனர் காதர்ஹாசன் இப்படத்தைப் பற்றி கூறுகையில்,

“துள்ளத் துள்ள இளமை பொங்கும் கல்லூரி காதல் கதை என்பதால் படத்திற்கு ‘குளுகுளு நாட்கள்’ என்று பெயர் வைத்திருக்கிறோம். காதலைப் பொருத்தவரை ஆண்களுக்கு ஜாலியாக அல்லது விளையாட்டாகக் கூட இருக்கலாம்.

பெண்களுக்கு அது நேர் எதிர். சாமான்யமாக ஒருத்தனைக் காதலித்துவிட மாட்டார்கள். அப்படி காதலித்துவிட்டால், அதில் தீவிரமாக இருப்பார்கள். காதலை உயிர் மாதிரி பார்ப்பார்கள். இதில் சில விதிவிலக்குகள் இருக்கலாம்.

பசங்க ஒரு பெண்ணை காதலிக்கும் போது கூட,  வளைவு நெளிவுகளுடன் இன்னொருத்தியை பார்த்துவிட்டால் ட்ரை பண்ணலாமான்னு நினைப்பார்கள். ஆனால் பெண்கள் ஒருத்தனை காதலித்துவிட்டால் அதன்பிறகு எவ்வளவு பெரிய மன்மதன் வந்து நின்றாலும் ஏறெடுத்துக்கூடப்  பார்க்கமாட்டார்கள்.   அந்தமாதிரி ஒரு கருவை மையப்படுத்தி நகர்வதுதான் குளு குளு நாட்கள்,” என்கிறார் காதர்ஹாசன்.

காமராவை உத்பல் (சாமுண்டி) கையாள, எடிட்டிங்கை மென்டோஸ் அண்டனியும், கலையை அர்க்கன் அமைக்க, லாரென்ஸ் சிவா, பாப்பி ஆகியோர் நடனம் அமைக்க ‘போக்கிரி’ படப் புகழ்   வசன கர்த்தா வி. பிரபாகர்  வசனம் எழுதியுள்ளார். கதை திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் காதர்ஹாசன்.

சென்னை மகாபலிபுரம், பாண்டிச்சேரி, கொச்சி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்தது.

Read Previous

‘சிவப்பு’ கலர் மட்டுமல்ல….

Read Next

‘சேட்டை’ மாதிரி இனி நடிக்க மாட்டேன் – சந்தானம்

Most Popular