விடிவி கணேஷ், சந்தானம், மீரா ஜாஸ்மின், முக்கிய கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘இங்க என்னா சொல்லுது’.
இப்படத்திற்காக சிம்பு எழுதி, பாடிய பாடல் ஒன்று சமீபத்தில் பதிவு செய்யப்பட்டது.
“குட்டிப் பயலே..குட்டிப் பயலே..எதை நீ தேடி ஓடுற..சுட்டிப் பயலே சுட்டிப் பயலே…என்னத்த நீ தேடுற…” என்ற இந்த பாடல் நிச்சயம் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்கிறார் இயக்குனர் வின்சென்ட் செல்வா.
சிம்பு, இந்த படத்தின் கதை விவாதங்களிலும் கலந்து கொண்டு, பெரும் ஈடுபாட்டுடன் நண்பர் விடிவி கணேஷுக்காக தன்னுடைய பங்களிப்பை செய்து வருகிறார்.
வேகமாக வளர்ந்து வருகிறது ‘இங்க என்னா சொல்லுது’.