கணேஷ் வெங்கட்ராம், கல்பனா பன்டிட், ஷோபனா நடித்த ‘பனித்துளி’ படத்தை இயக்கியவர் நட்டிகுமார்.
இந்திரா காந்தியின் வாழ்கையை படமாக்க வேண்டும் என்பதுதான் இவருடைய நீண்ட நாள் கனவாம்.
அது இப்போது நனவாகப் போகிறது என்று கூறுகிறார்.
இந்தியாவின் இரும்பு பெண்மணியாக போற்றப்படும் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை திரைக்கதையாக்கிக் கொண்டிருக்கிறார் நட்டிகுமார்.
ஆங்கிலம், தமிழ், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் படம் தயாராக உள்ளது.
தலைப்பு அநேகமாக ‘IRON LADY INDHIRA GANDHI’ என்று இருக்கலாம்.
“ஹாலிவுட் நடிகை சூசன் சரண்டாதான் இந்திராகாந்தி வேடத்தில் நடிக்க பொருத்தமானவராக இருப்பார் என நான் நினைக்கிறேன். காலம் கனியும் போது எல்லாம் நன்றாக நடக்கும்,” என்கிறார் இயக்குனர் நட்டிகுமார்.