இளையராஜா காப்பி அடித்தார் – கங்கை அமரன் பேச்சு

gangai amaranஇராம. நாராயணன் இயக்கத்தில் ‘ஆர்யா சூர்யா’ என்ற படத்தில் நடிகராகம் அறிமுமாகிறார் கங்கை அமரன்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது பத்திரிகையாளர்களுக்கு ஏதாவது எழுதுவதற்குத் தீனி கொடுக்க வேண்டும் என்று சொல்லி விட்டுப் பேசிய கங்கை அமரன், இளையராஜாவும் காப்பி அடித்திருக்கிறார் என்று பேசி அவர் நினைத்தது போலவே  நம்மையும் எழுத  வைத்து விட்டார்.

அவர் பேசியதிலிருந்து, “வாழ்க்கையில எவ்வளவோ நடிச்சிருக்கிறேன். இசையமைப்பாளரா, இயக்குனரா, அப்பாவா, தம்பியா, இப்படிலாம் நடிச்சிருக்கிறேன். ஆனால், சினிமாவுக்குள்ள நடிக்கிறது இதுதான் முதல் முறை.

அப்பலாம், என்னை பலர் இசையமைக்கக் கூப்பிடுவாங்க. அண்ணன் இளையராஜா கிட்ட இருந்து பாடல்களை திருடிட்டு வருவன்னு என்னை இசையமைப்பாளரா போடுவாங்க. பாக்யராஜ் கூட கிண்டல் பண்ணுவாரு. அண்ணன் அந்த பக்கம் போட்ட டியூனையெல்லாம் தூக்கிட்டு வந்துடுவன்னு கிண்டலா சொல்வாரு.

நிஜமா சொன்னால், இளையராஜா போட்ட பாடல்களை காப்பி அடித்துத்தான் நான் பாடல்களை  உருவாக்கியிருக்கிறேன். இளையராஜாவும் அண்ணன் எம்.எஸ்.வி பாடல்களை காப்பி அடிச்சும் இசையமைச்சிருக்காரு. அது எனக்கும் இளையராஜாவுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்.

நாம எல்லாரும் அதையெல்லாம் கேட்டுத்தான் வளர்ந்திருக்கிறோம். சில விஷயங்களை ரகசியமா பாதுகாக்கணும். பெரியவங்களுக்கு இழுக்கு வந்துடக் கூடாது.

ஒருவர் தானாக புத்திசாலி ஆவது கிடையாது. எதையாவது ஒண்ண பற்றித்தான் வளர முடியும்.

சந்தர்ப்பம் இல்லாமல் திறமையை காட்ட முடியாது. சந்தர்ப்பத்தை சரியாக உபயோகப்படுத்திக் கொண்டால்தான் உயர முடியும்.

இளையராஜா வந்த போது அவருக்கு நாட்டுப் புற இசை மட்டும்தான் தெரியும்னு சொன்னாங்க. ஆனால், ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்துல வெஸ்டர்ன் மியூசிக்ல அடிச்சி , பின்னிட்டாரு. ‘சிந்து பைரவி’ படத்துல வித்வான்களே கலங்கற அளவுக்கு பண்ணாரு.

சந்தர்ப்பங்கள்தான் ஒரு மனிதனை உருவாக்கிதுன்றது உண்மையான விஷயம்,” என்று கங்கை அமரன் பேசினார்.

உங்க பேச்சி இன்னைக்கு எல்லா மீடியாலயும் வரணும்னு நினைச்சீங்க ஸார். வந்தாச்சி…மகிழ்ச்சிதான…

இதுவும் ஒரு விதத்துல சந்தர்ப்பம்தான்…

Read Previous

சிங்கம் 2 – விமர்சனம்

Read Next

ஆர்யா எனக்கு நல்ல நண்பர் – நயன்தாரா