ஆர்யா எனக்கு நல்ல நண்பர் – நயன்தாரா

arya-nayanthara‘பாஸ் (எ) பாஸ்கரன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தமிழ்த் திரையுலகில் சிறந்த ஜோடிகளுள் ஒன்றாக கருதப்பட்டு வரும் ஜோடி ஆர்யா – நயன்தாரா ஜோடி.

தற்போது ‘ராஜா ராணி’ படத்தில் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள்.

சமீப காலமாக மீடியாக்களில் இருவம் காதலிக்கிறார்கள் என்று செய்திகள் வெளிவந்தபடி உள்ளன. இது சம்பந்தமாக சமீபத்திய பத்திரிகை பேட்டி ஒன்றில் நயன்தாரா பதிலளித்திருக்கிறார்.

“நான் வதந்திகளைப் பற்றி கண்டு கொள்வதில்லை. எல்லோரும் எழுதுவதெல்லாம் உண்மையாகி விடாது. ஒரு ஆணும், பெண்ணும் உறவு முறைகளில்தான் பழக வேண்டும் என்பதில்லை, நண்பர்களாகப் பழகலாம்.

எங்கள் இருவருக்குள்ளும் எதுவும் இல்லை. நான் தனியாக இருப்பதில் சௌகர்யமாக உணர்கிறேன். என் தனித்த வாழ்க்கையில் நான் நன்றாகவே இருக்கிறேன்.

நாங்கள் இருவரும் நண்பர்களாக இருப்பதால், நாங்கள் இருவரும் தனித் தனியாக இருப்பதால் இருவரும் ஒன்றாக சேர்ந்து வெளியில் செல்கிறோம் என்றெல்லாம் கற்பனை செய்து கொள்கிறார்கள்.

‘டேட்டிங்’ செல்லாமலே இரு நட்சத்திரங்கள் நல்ல நண்பர்களாக இருக்க முடியும். வழக்கமா நண்பர்கள் எப்படி பழகுகிறார்களோ அப்படித்தான் நாங்கள் பழகுகிறோம்.

இன்னும் கொஞ்ச நாளைக்கு தனியாகவே இருக்க விருப்பப்படுகிறேன். இப்போதைக்கு வேறு உறவைப் பற்றி சிந்திக்கும் நிலையில் நான் இல்லை.

இப்போதைக்கு நல்ல படங்களில் நடிக்க வேண்டும். ஆர்யா எனக்கு நல்ல நண்பர், அது எப்போதும் அப்படியே இருக்கும்.

இனி, யாரும் இதைப் பற்றி பேசாமல் இருந்தால் நல்லது, ” என்று நயன்தாரா கூறியுள்ளார்.

Read Previous

இளையராஜா காப்பி அடித்தார் – கங்கை அமரன் பேச்சு

Read Next

இளையராஜாவால் இசையமைப்பாளர் ஆனேன் – கே. பாக்யராஜ்

Most Popular