எங்கள் தனிப்பட்ட விஷயம் – சிம்பு, ஹன்சிகா

hansika-and-simbuசிம்புவுக்கும், ஹன்சிகாவுக்கும் காதல், இருவரும் விரைவில் திருணமம் செய்து கொள்ளப் போகிறார்கள் என கடந்த சில வாரங்களாகவே ஒரு பரபரப்பு நிலவி வருகிறது.

ஒரு வாரப் பத்திரிகையின் பேட்டியில் கூட ஹன்சிகா, சிம்பு எனக்கு நண்பர் மட்டுமே என கூறியிருந்தார்.

ஆனால், இப்போது இருவரும், ஆம்..நாங்கள் சந்தித்துக் கொள்கிறோம், அது எங்களது தனிப்பட்ட வாழ்க்கை என ‘ட்விட்டர்’ மூலம் தெரிவித்திருக்கிறார்கள்.

சிம்பு ட்விட்டரில் கூறியுள்ளதாவது, “சில மீடியாக்கள் அவர்களது சத்தத்தைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும். எனது தனிப்பட்ட வாழ்ககையைப் பற்றி தவறான செய்திகளை வெளியிடுவதை நிறுத்த வேண்டும்.

ஆம். நான் இப்போது ஹன்சிகாவுடன்தான் இருக்கிறேன். அவர் நலமாக இருக்கிறார். திருமணத்தை குடும்பத்தினர்தான் முடிவு செய்வார்கள். எங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மரியாதை கொடுப்பீர்கள் என நினைக்கிறோம்”, என்று கூறியுள்ளார்.

ஹன்சிகா ட்விட்டரில் கூறியுள்ளதாவது, “எனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பல விஷயங்களைக் கேள்விப்படுகிறேன். அதை சரி செய்ய நினைக்கிறேன். ஆம்..நான் சிம்புவை சந்திக்கிறேன். இனி, என் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேச மாட்டேன்,” என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் மீடியாக்களில் வரும் வதந்திகளுக்கு அவர்கள் முற்றுப்புள்ளி வைத்து விட்டனர்.

Read Previous

மரியான் – விமர்சனம்

Read Next

60வது பிலிம்ஃபேர் விருதுகள்…