பிரபு சாலமன் இயக்கத்தில் ‘கயல்’

kayal press meet‘மைனா’, ‘கும்கி’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கும் அடுத்த படத்திற்கு ‘கயல்’ என பெயரிட்டிருக்கிறார்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் புதுமுகங்கள் சந்திரன், வின்சென்ட், ஆனந்தி ஆகியோரை அறிமுகப்படுத்துகிறார். இவர்களுடன் இமான் அண்ணாச்சியும் நடிக்கிறார். மற்ற கதாபாத்திரத் தேர்வு நடைபெற்று வருகிறது.

இமான் இசையமைக்க, யுகபாரதி பாடல்களை எழுதுகிறார்.

இப்படத்தின் அறிமுக விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

‘மைனா, கும்கி’ படங்களைப் போன்று இப்படமும் ஒரு காதல் கதைதான். மற்ற விவரங்களை அப்புறம் சொல்கிறேன், ” என பிரபு சாலமன் பத்திரிகையாளர்  சந்திப்பை முடித்துக் கொள்ள, நமது பத்திரிகை நண்பர்கள் அவரை விடவில்லை.

கடல் சார்ந்த காதல் கதையா, ஆகாயத்துல பறக்குற மைனா, நிலத்துல வாழற கும்கி, அடுத்து நீரில் வாழும் கயல்…என்ன இப்படி மற்ற உயிரினங்கள் பேரா படத்துக்கு வைக்கறீங்களே, கதைச் சுருக்கமாவது சொல்லுங்க இப்படி கேள்விகள் எழ, ஒரு பத்து நாள் பொறுத்துக்குங்க சொல்றன், என பதிலளித்தார் பிரபு சாலமன்.

ஆகவே, ‘கயல்’ பற்றி மேலும் தெரிந்து கொள்ள…கொஞ்சம் காத்திருங்க…

Read Previous

விமல், சமுத்திரகனி நடிக்கும் ‘நீயெல்லாம் நல்லா வருவடா’

Read Next

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் ‘வை ராஜா வை’ ஆரம்பம்