“அறிந்தும் அறியாமலும், பட்டியல்” வெற்றிப் படங்களைத் தயாரித்த எஸ்ஜி பிலிம்ஸ் பி. லிட்., நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘நீயெல்லாம் நல்லா வருவடா”.
இப்படத்தில் விமல், சமுத்திரகனி இணைந்து நடிக்கிறார்கள். இவர்களுடன் வெளிநாட்டுத் தமிழ்ப் பெண் கீதா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
மற்றும் எம்.எஸ். பாஸ்கர், சிங்கமுத்து, இமான் அண்ணாச்சி, நமோ, ‘கும்கி’ அஸ்வின், தேவா அகியோர் நடிக்கிறார்கள்.
உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தை ஆர்.நாகேந்திரன் எழுதி, இயக்குகிறார். இவர் ‘தம்பி’, ‘வாழ்த்துகள்’ திரைப்படங்களில் இயக்குனர் சீமானுடனும், ‘திருட்டுப் பயலே’, ‘கந்தசாமி’, ‘ஷார்ட் கட் ரோமியோ’ (இந்தி) ஆகிய படங்களில் இயக்குனர் சுசி கணேசனுடனும் இணை இயக்குனராகப் பணியாற்றியவர்.
இத்திரைப்பத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். நா.முத்துக்குமார், சினேகன் பாடல்கள் எழுதுகிறார்கள். என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தொகுப்பு – பிரவீன் – ஸ்ரீகாந்த், கலை – விதேஷ், ஆடை வடிவமைப்பு – சங்கீதா, சண்டைப் பயிற்சி – சில்வா, நடனம் – கல்யாண்.
காமெடி, ஆக்ஷன் கலந்த இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தொடங்கி சென்னை, ஊட்டி, கேரளா மற்றும் ஆஸ்திரேலியா, மலேசியா ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.