‘பசங்க’, ‘வம்சம்’, ‘மெரினா’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படங்களுக்குப் பிறகு பாண்டிராஜ் , சிம்புவை வைத்து இயக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமானது.
இந்த படத்தின் மூலம் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார்.
சந்தானம், சூரி ஆகியோரும் படத்தில் நடிக்கிறார்கள். படத்திற்கான டைட்டில் தேர்வும், நாயகி தேர்வும் நடைபெற்று வருகிறது.
இப்படம் காதல் , நகைச்சுவை கலந்த திரைப்படமாக உருவாகிறது. கிராமத்துப் பின்னணி கதை. தன்னிடமிருந்து ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தை எதிர்பார்க்கலாம் என்கிறார் சிம்பு.
சிம்பு ஏற்கனெவே ‘வாலு, வேட்டை மன்னன், இங்க என்ன சொல்லுது’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
பாண்டிராஜ் – சிம்பு இணையும் புதிய கூட்டணி நிறையவே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது…