2012ம் ஆண்டு புதிய களம், வித்தியாசமாக கதை சொல்லும் முறை ஆகியவற்றைக் கொண்ட சில படங்கள் நல்ல வரவேற்பையும், நல்ல வெற்றியையும் பெற்றன.
அது இந்த ஆண்டிலும் தொடர்வது தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய ஒரு விஷயம்.
அந்த வரிசையில் வரும் வெள்ளியன்று வெளியாக உள்ள ‘விடியும் முன்’ திரைப்படம் நிச்சயம் இடம் பெறும்.
ஒரு தவறான இடத்தில் சிக்கிக் கொள்ளும் ஒரு சிறுமியை, ஒரு விலைமாது காப்பாற்றத் துடிப்பதுதான் படத்தின் கதை.
பாலாஜி கே. குமார் இயக்கியுள்ள இப்படத்திற்கு இசை கிரீஷ் கோபாலகிருஷ்ணன். ஜாவித் கயும் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
‘ஜே ஜே’ படத்தில் அறிமுகமாகி ‘நான் கடவுள்’ படத்தில் பார்வையற்றவராக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்ற பூஜா இந்த படத்தில் விலைமாதாக நடித்திருக்கிறார்.
ஜான் விஜய், வினோத் கிஷன், அமரேந்திரன், முத்துக்குமார், மாளவிகா மணிகுட்டன், லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
ஹீரோயிசம் இல்லாத, பன்ச் வசனங்கள் இல்லாத, கோடி ரூபாய் செய்து கிராஃபிக்ஸ் காட்சிகள் இல்லாத, இப்படி வழக்கமான தமிழ் சினிமாவில் இடம் பெறுபவை இல்லாத வித்தியாசமான படம் ‘விடியும் முன்’.
நல்ல படத்தை ஆதரிக்கும் தமிழ் ரசிகர்கள் இந்த படத்தையும் ஆதரிப்பார்கள் என நம்புவோம்…