‘இரண்டாம் உலகம்’ படத்தினை 60 கோடி ரூபாய் செலவில் இயக்கிய செல்வராகவன் அடுத்து இயக்கவிருக்கும் படத்தை ‘ஸ்மால் பட்ஜெட்’ படமாக்கத்தான் எடுக்கப் போகிறாராம்.
‘இரண்டாம் உலகம்’ படத்தில் வித்தியாசமான சிங்கத்துடன் ஆர்யா மோதும் அந்த சில நிமிடக் காட்சிக்கு மட்டுமே 6 கோடி ரூபாய் வரை செலவு செய்திருக்கிறார்கள்.
அந்த தொகையில் ஒரு படத்தையே எடுத்து முடித்துவிடலாம்.
பெரிய பட்ஜெட் படங்களுக்கு தற்போது வரவேற்பு இல்லாத காரணத்தால் செல்வராகவன் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்கிறார்கள்.
ஆரம்ப காலங்களில் குறைந்த முதலீட்டுப் படங்களையே எடுத்து வந்த செல்வராகவன் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தை அதிக பட்ஜெட்டுடனும், நீண்ட நாட்களும் எடுத்தார். அதற்குப் பிறகு ‘இரண்டாம் உலகம்’ படமும் அப்படியே எடுக்கப்பட்டுள்ளது.
‘பட்ஜெட்’ எப்படி இருந்தால் என்ன எல்லாரும் ரசிக்கிற மாதிரி எடுங்க…