கோவா – சர்வதேச திரைப்பட விழாவில் ‘தங்க மீன்கள்’

thanga meengal iffi 2013_00001கோவாவில் நடைபெற்று வரும் 44வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ‘தங்க மீன்கள்’ திரைப்படம் இன்று திரையிடப்பட்டது.

உலகின் பல்வேறு இடங்களிலிருந்து வந்த ரசிகர்கள் படம் திரையிடப்பட்ட ஐநாக்ஸ் திரையரங்கம் முழுவதும் குழுமியிருந்தனர். அடுத்து 29ம் தேதியன்றும் படம் திரையிடப்பட இருக்கிறது.

இந்தியன் பனோரமாவில் திரையிடப்படுவதற்காக தேர்வாகியிருந்த ஒரே தமிழ்ப் படம் ‘தங்க மீன்கள்’ என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் திரையிடலுக்கு முன் இயக்குனர் ராம், படத்தில் நடித்திருந்த பத்மப்ரியா, ஷெல்லி, படத்தை வெளியிட்ட ஜே.எஸ்.கே.சதீஷ் குமார் ஆகியோருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

“மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும், முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று” என தமிழில் பேச ஆரம்பித்தார் இயக்குனர் ராம்.

“இங்கு தமிழில் பேச ‘தங்க மீன்கள்’ எனக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது, ” என்றார் ராம்.

‘தங்க மீன்கள்’ குழுவினருக்கு நமது வாழ்த்துகள்…

 

Read Previous

‘விடியும் முன்’ – தமிழ் சினிமாவில் ஒரு விடியல்…

Read Next

சரத்குமார் – இனியா நடிக்கும் ‘வேளச்சேரி’