தமிழ்த் திரையுலகில் இப்போது யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறதோ இல்லையோ, சிவகார்த்திகேயனுக்குத்தான் சரியான அதிர்ஷ்டம் என கோடம்பாக்த்தில் பேசிக் கொள்கிறார்கள்.
ஏற்கெனவே, ‘மான் கராத்தே’ படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க ஆரம்பிக்கும் போதே பலர் காதில் புகை வந்தது.
இப்போது அவர் அடுத்து புதிதாக நடிக்கவிருக்கும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க நயன்தாராவைக் கேட்டுள்ளார்களாம்.
அதற்கு அவரும் சரியென சொன்னதாகவும் சொல்கிறார்கள். இதுதான் இப்போதைய தமிழ் சினிமாவின் ஹாட் டாபிக் ஆக வலம் வந்து கொண்டிருக்கிறது.
ம்ம்ம்…உடம்புல மச்சம் இருக்கும்னு சொல்வாங்க…ஆனால், சிவகார்த்திகேயன் மச்சத்துலயே உடம்பு வச்சிருக்காரே……….