சன் பிக்சர்ஸ் வாங்கிய ‘இங்க என்ன சொல்லுது’…

inga-enna-solluthu-paper-ad‘குட்டிப் புலி’ படத்திற்குப் பிறகு எந்த படத்தையும் வாங்காமலிருந்த சன் பிக்சர்ஸ் தற்போது, விடிவி கணேஷ், மீரா ஜாஸ்மின், சந்தானம்  நடிக்கும் ‘இங்க என்ன சொல்லுது’ படத்தை வாங்கியிருக்கிறாரகள்.

இன்று இப்படத்தின் இசை வெளியீடும் நடைபெற்றது.

சிம்பு கௌரவ தோற்றத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆன்ட்ரியா நடித்துள்ளார். மற்றும் பாண்டியராஜன்,மயில் சாமி, இயக்குனர் கே. எஸ் . ரவி குமார், ஆகியோருடன் ஆகியோருடன் ஸ்வர்ணமால்யா   நடித்து உள்ளார். இப்படத்தில் பட தொகுப்பாளர் ஆண்டனி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து  உள்ளார்.

இசை அமைப்பாளர் தரனின் இசையில் ஏழு பாடல்கள் படத்தில் இடம் பெற்றுள்ளன. விடிவி கணேஷ் இரண்டு பாடல்களை எழுதி, அதில் ஒரு பாடலைப் பாடியும் உள்ளார். இதன் மூலம் பாடகராகவும் மாறியிருக்கிறார கணேஷ்.

விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.

 

 

Read Previous

‘ஜில்லா’ – சம்பளம் வாங்காத மோகன்லால்…

Read Next

‘மங்காத்தா 2’ இயக்க நான் ரெடி – வெங்கட் பிரபு