‘ஜில்லா’ – சம்பளம் வாங்காத மோகன்லால்…

jilla 2811_00002மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தற்போது விஜய்யுடன் இணைந்து நடித்து வரும் படம் ‘ஜில்லா’ என்பது அனைவருக்கும் தெரியும்.

இப்படத்திற்காக மோகன்லால் இதுவரை எந்த சம்பளமும் வாங்கவில்லை என்பது, யாருக்கும் தெரியாத விஷயம்.

ஆனால், அதற்குப் பதிலாக ‘ஜில்லா’ படத்தின் கேரள வினியோக உரிமை மோகன்லாலுக்கு வழங்கப்பட்டுவிட்டது.

சுமார் 4 கோடி ரூபாய் வரை அப்படத்தின் கேரள வினியோக உரிமைக்கா விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாம். அப்படியென்றால் மோகன்லால் ‘ஜில்லா’ படத்தில் நடித்ததற்காக வழங்கப்படும் சம்பளம் 4 கோடி.

விஜய் நடிக்கும் படத்திற்கு பொதுவாக கேரளாவில் நல்ல வசூல் கிடைத்து வருகிறது. இப்படத்தில் மோகன்லால் வேறு இணைந்துள்ளதால்  வசூல் வழக்கத்தை விட மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை கருத்தில் கொண்டே மோகன்லால் கேரள உரிமையை வாங்கியிருக்கிறாராம். அதே சமயம், படத்திற்கு கேரளாவில் வசூலாகும் தொகை மோகன்லால் வாங்கிய 4 கோடி ரூபாயை விட பல மடங்கு வசூலாக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

அப்படியென்றால மோகன்லாலின் சம்பளம் எவ்வளவு இருக்கும் என்று கூட்டிக் கழித்துப் பாருங்கள், சரியாக வரும்.

Read Previous

‘பிரியாணி’ படத்தில் கார்த்தி ஒரு ‘வுமனைசர்’ – அதிர்ச்சி அளித்த வெங்கட் பிரபு

Read Next

சன் பிக்சர்ஸ் வாங்கிய ‘இங்க என்ன சொல்லுது’…