படத்தோட பேரை தப்பா சொல்லிட்டோம்னு நினைக்காதீங்க…கடைசில வைக்கிற ‘பன்ச்’சை தலைப்புல வச்சிருக்கோம்…அவ்வளவுதான்…
விக்ரம் பிரபு, சுரபி மற்றும் பலர் நடிக்க ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கியுள்ள ‘இவன் வேற மாதிரி’ திரைப்படம் வரும் 13ம் தேதி வெளியாக உள்ளது.
படத்தை அதிக திரையரங்குகளில் திரையிடுவதாக தயாரிப்பு வட்டாரம் சொல்லிக் கொண்டிருக்க , படத்தின் கதை ஏற்கெனவே பல படங்களில் பார்த்துப் பழகிப் போன வழக்கமான மசாலா சமாச்சாரம்தான் என தகவல் வெளியாகி உள்ளது.
முதலில் இந்த படத்தில் ஆர்யாதான் நடிப்பதாக இருந்தது. ஆனால், அவர் கதை ஏற்கெனவே வந்த ‘இந்தியன், அந்நியன்’ படங்களைப் போல் இருப்பதாக சொல்லி நடிக்க மறுத்து விட்டாராம்.
அதன் பின்தான் இந்தப் படத்தில் விக்ரம் பிரபுவை ஹீரோவாக்கினார்கள்.
மேலும் ‘பிரியாணி’ படம் 20ம் தேதி வெளிவர இருப்பதால், பல திரையரங்குகளில் அப்படத்தை வெளியிடவே விரும்புவதாகவும், அதனால் ‘இவன் வேற மாதிரி’ திரைப்படத்திற்கு ஒரு வாரம் மட்டுமே திரையரங்குகளை கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது.
என்னமோ…இவன், அவன் ஆகாம இருந்தால் சரி….