சிவகார்த்திகேயன், ஹன்சிகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘மான் கராத்தே’ படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமை 30 கோடி ரூபாய் வரை விற்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அது மட்டுமல்ல படத்தின் சாட்டிலைட் தொலைக்காட்சி உரிமையைப் பெறவும் பல தொலைக்காட்சி நிறுவனங்களிடையே பலத்த போட்டி உருவாகியுள்ளதாகவும் தெரிகிறது.
தற்போது சிறந்த வெற்றிப் படங்களின் தொலைக்காட்சி உரிமை சுமார் 10 கோடி ரூபாய் வரை விற்கப்படுகின்றன.
அப்படியானால் ‘மான் கராத்தே’ திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமையெல்லாம் சேர்த்தால் 50 கோடி ரூபாய் வரை நடைபெறும் எனச் சொல்கிறார்கள்.
சிவகார்த்திகேயன் நடித்து இந்த ஆண்டு வெளிவந்த ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாலேயேதான் இந்த படத்தின் விலை இவ்வளவு அதிகமாக விற்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஏப்ரல் மாதம் வர இருக்கும் படத்திற்கு இப்போதே ஏற்றம்தான்…