மொத்தமாக ‘குத்தகை‘ எடுத்த தனுஷ்…

dhanush and anirudh“பொல்லாதவன், ஆடுகளம், சிறுத்தை, எங்கேயும் எப்போதும், 3, எதிர் நீச்சல், உதயம் என்எச் 4, நய்யாண்டி” போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய் வேல்ராஜ் இயக்குனராக அவதாரம் எடுக்கும் படம் ‘வேலை இல்லா பட்டதாரி’.

தனுஷ், அமலா பால், சதீஷ் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்திற்கு இசை அனிருத்.

தனுஷ் நடித்து வெளிவர உள்ள 25வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்காக பாடல்கள் எழுதுவது பாடுவது என அனைத்தையுமே மொத்தமாக குத்தகை எடுத்திருக்கிறார் தனுஷ்.

ஆம், படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்துப் பாடல்களையும் எழுதியிருப்பது தனுஷ்.

அது மட்டுமல்ல அனைத்துப் பாடல்களையும் பாடவும் செய்திருக்கிறாராம். அதில் ஒரு பாடலை எஸ்.ஜானகியுடன் இணைந்து பாடியிருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீடு அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

எல்லாம் ‘கொலை வெறி’ புகழ்….

Read Previous

அதிகரித்து வரும் ஒரு வாரப் படங்கள்…

Read Next

ஆரம்ப கால தயாரிப்பாளர்களுக்கு விஜய் 25 லட்சம் உதவி…

Most Popular