சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் நேசன் இயக்கத்தில் , இமான் இசையமைப்பில், விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் பொங்கலுக்கு வெளியாக உள்ள ‘ஜில்லா’ படத்திற்கு அனைவரும் பார்த்து ரசிக்கக் கூடிய ‘யு’ சர்டிபிகேட் கிடைத்துள்ளது.
இன்றுதான் படத்திற்கு சென்சார் நடைபெற்றது. சற்று முன்னர்தான் படத்திற்கான சான்றிதழ் வழங்கினர்.
விஜய், மோகன்லால் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளதால் இந்த படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
‘துப்பாக்கி’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விஜய், காஜல் அகர்வால் ஜோடி மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளார்கள்.
படத்தின் டிரைலர் நாளை வெளியிடப்பட உள்ளது.