ரஜினிகாந்த் நடித்த படங்களில் திரும்பத் திரும்ப பார்த்து ரசிக்கக் கூடிய படங்களில் ஒன்றாக அமைந்த படம் ‘பாட்ஷா’.
1995ம் ஆண்டு வெளிவந்த இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், ஆக்ஷன், நடிப்பு என அனைத்துமே ஒரு சேர பிரமாதமாக அமைந்து இன்று வரை அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.
தொலைக்காட்சியில் எத்தனை முறை ஒளிபரப்பினாலும் அதைப் பார்த்து ரசிப்பதற்கென்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது.
அப்படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா சமீபத்திய பேட்டி ஒன்றில்,
“எனக்கு ‘பாட்ஷா’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாக உள்ளது. இது சம்பந்தமா அவரை சந்திச்சும் பேசியிருக்கேன். ஆனால், ரஜினி சாருக்குதான் ஒரு தயக்கம் இருந்துக்கிட்டே இருக்கு.
“இது நல்ல விஷயமா, சரியா இருக்குமான்னு நிறைய யோசனையா இருக்கு, பார்க்லாம்…, அப்படின்னு அவர் சொல்றாரு.
அப்படி ‘பாட்ஷா 2’ படம் எடுத்து ஹிட் ஆச்சின்னா , அது முதல் பாகத்தை மறக்கச் செஞ்சிடும். ஹிட் ஆகாமப் போச்சின்னா, அசிங்கமாயிடும்னு, ரஜினி சார் நினைக்கிறார்னு தோணுது.
ஆனாலும், ‘பாட்ஷா 2’ படத்தை உருவாக்கணும்கற கனவு எனக்குள்ள அப்படியேதான் இருக்கு. அப்படி ஒரு படம் வரும்கிற நம்பிக்கையும் இருக்கு, ” என்கிறார் சுரேஷ் கிருஷ்ணா.
உங்க கனவும், நம்பிக்கையும் சீக்கிரமே நிறைவேற வாழ்த்துகள்.