தமிழ் நடிகர்களிலேயே விஜய்க்குதான் கேரளாவில் அதிக ரசிகர் மன்றங்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதனால்தான் , ‘ஜில்லா’ படத்தில் கூட மோகன்லாலை நடிக்க வைத்து மலையாளத்தில் இன்னும் அழுத்தமாக காலூன்ற முடிவெடுத்தார் என்றும் திரையுலக நோக்கர்கள் சொல்வார்கள்.
எதிர்பார்த்தபடியே ‘ஜில்லா’ திரைப்படத்திற்கு மோகன்லால் நடித்ததால் நல்ல எதிர்பார்ப்பும், வசூலும் கிடைத்துள்ளதாக சொல்கிறார்கள்.
கேரளாவில், ஏறக்குறைய 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘ஜில்லா’ வெளியானது.
விஜய், இன்று காலை ட்விட்டர் சமூக வலைத்தளம் மூலம் ‘ஜில்லா’ படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் பகிரிந்து கொண்டார்.
அப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு விஜய் பதிலளித்ததிலிருந்து சில….
- எனக்கு மலையாளப் படத்தில் நடிக்க ஆசையாக உள்ளது. மீண்டும் மோகன்லால் அவர்களுடன் இணைந்து நடிப்பேன். அவருடன் நடித்தது மிகப் பெரிய அனுபவம்.
- நீங்களும், அஜித் ரசிகர்களும் சண்டையிட்டுக் கொள்வது ஆரோக்கியமான விஷயமல்ல. இது போன்ற விஷயங்களை நீங்கள் தவிர்க்க வேண்டும்.
- எனக்கு கிடைக்கும் பாராட்டுக்களையும் ஏற்றுக் கொள்வேன். அதே சமயம், விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்வேன்.
- எனக்கு எப்பவுமே தமிழ்ப் படங்களில் நடிக்க ஆசை. ஹிந்திக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தது கிடையாது.
- நடிகர் விக்ரம்தான் தமிழ் சினிமாவில் கடுமையாக உழைக்கக் கூடிய நடிகர்.
- உங்கள் குடும்பத்தை நல்லபடியாக பார்த்துக் கொள்ளுங்கள், நீங்கள் செய்யும் வேலையை சரியாகச் செய்யுங்கள்.
என ரசிகர்களை கேட்டுக் கொண்டார் விஜய்.