தமிழ் சினிமாவில் இப்போது அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகை, அதிகப் படங்களில் நடித்து வரும் பெரிய நடிகை என பெயர் பெற்றிருப்பவர் நயன்தாரா.
இவர் நடித்துள்ள ‘இது கதிர்வேலன் காதல்’ அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது.
இப்போது சிம்பு ஜோடியாக பாண்டிராஜ் இயக்கும் படம், ஜெயம் ரவி ஜோடியாக ஜெயம் ராஜ இயக்கும் படம், சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ் , தெலுங்கில் தயாராகும் ‘அனாமிகா’ ஆகிய படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.
இதில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் காவல் துறை அதிகாரியாக, காக்கிச் சட்டை அணிந்து நடித்து வருகிறாராம் நயன்தாரா.
முதல் முறையாக காவல் துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கும் நயன்தாராவுக்கு அந்த தோற்றம் மிகவும் மிடுக்காக உள்ளதாம்.
முதல் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்து, அடுத்த கட்டப் படப்பிடிப்பு தற்போது பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.