பெயர்தான் ‘ஜீரோ’…ஆனால், படத்தில் சக்தி இருக்கு…

Zero_00003மாதவ் மீடியா என்டர்டெயின்மென்ட் சார்பாக பாலாஜி கப்பா தயாரிக்கும் படம் ‘ஸீரோ’. வி. அருண்குமார் இயக்கத்தில் நிவாஸ் பிரசன்னா இசையமைக்கும் இந்தப் படத்தில் அஷ்வின், ஷிவதா நாயர், ஜே.டி. சக்கரவர்த்தி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் இயக்குனர் அருண்குமார், தனுஷ் நடித்த ‘மரியான்’ படத்தில் இணை இயக்குனராகப் பணியாற்றியவர். இந்தப் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இந்தப் படமும் ஒரு பேய்ப் படமல்ல, ஆனால் ஒரு அபரிமிதமான சக்தி படத்தில் இருக்கிறது என்கிறார் இயக்குனர்.

“ஆனந்தமாக வாழ்ந்து வரும் அஷ்வின், ஷிவதா வாழ்க்கையில் எதிர்பாராதவிதமாக ஒரு அதீத பலம் வாய்ந்த அமானுஷ்ய சக்தி ஒன்று குறுக்கிடுகிறது. இதனால் ஏற்படும் நிகழ்வுகள்தான் படத்தின் கதை. ஜீரோ’ன்னு ஏன் பேரு வச்சோம்னா, இந்த உலகத்தோட ஆரம்பத்தை அடிப்படையா வச்சிதான் இந்த கதையை உருவாக்கியிருக்கோம். உலகம் உண்டான போது தோன்றிய அந்த சக்தி இப்ப வந்த என்ன பண்ணுது, அதுதான் படம்.

வழக்கமா இது மாதிரி வர்ற படங்கள் பயமுறுத்த வைக்கும், ஆனால், இந்தப் படத்துல அப்படி எதுவும் இல்லை. அகோரமான முகம், ரத்தம், கருப்பு உருவம் அப்படி எதுவும் படத்துல இல்லை. அந்த அமானுஷ்ய சக்தியை வித்தியாசமாக காட்டியிருக்கோம். இதுவரைக்கும் 35 நாள் ஷுட்டிங் நடத்தியிருக்கோம். சென்னையில இருக்கிற பின்னி மில்லுல, ஹீரோ, ஹீரோயின் இருக்கிற ஃபிளாட்டை செட் போட்டு எடுத்திருக்கோம். அப்புறமா வட இந்தியாவுல ஷுட்டிங் பண்ணலாம்னு இருக்கோம்,” என்கிறார் இயக்குனர் அருண்குமார்.

‘மங்காத்தா, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படங்களில் நடித்துள்ள அஷ்வின் நாயகனாவும், ‘நெடுஞ்சாலை’ பட நாயகி ஷிவதா நாயகியாவும் இந்தப் படத்துல நடிக்கிறாங்க. தெலுங்கு நடிகரும், சமீபத்தில் வெளிவந்த ‘அரிமா நம்பி’ படத்தில் வில்லனா நடிச்சிருக்க ஜே.டி. சக்கரவர்த்தி, அந்த அமானுஷ்ய சக்தியை கட்டுப்படுத்துகிறவராவும் நடிச்சிருக்காங்க.

நவம்பர் மாதம் படம் திரைக்கு வருகிறது.

Read Previous

‘விஜய் விருதுகள்’ – விஜய்யின் தெளிவான பேச்சு…

Read Next

வைரமுத்து பாடலை இளையராஜா கண்டிப்பாக பாட மாட்டார்…