தமிழ்த் தொலைக்காட்சிகளில் தீபாவளியன்று எந்தெந்த திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளது என்பதைத் தெரிந்து கொள்வது தொலைக்காட்சிப் பிரியர்களுக்கு ஆர்வமான ஒரு விஷயம்தான்.
நாம் இதற்கு முன்பே செய்தி வெளியிட்டபடி சன்டிவியில் தீபாவளி தினத்தன்று விஜய், மோகன்லால், காஜல் அகர்வால், சூரி மற்றும் பலர் நடித்த ‘ஜில்லா’ திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. ஆர்.டி.நேசன் இயக்கத்தில் இமான் இசையமைத்துள்ள படம். இனிமையான பாடல்களுடன் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் படமாக இந்த தீபாவளிக்கு இப்படமும் இடம் பெறுகிறது.
தீபாவளியன்று மாலை 6 மணிக்கு ‘ஜில்லா’ திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பையும், புரோமோவையும் சன் டிவி வெளியிட்டுள்ளது.
தீபாவளியன்று ‘கத்தி’ படம் திரைக்கு வருகிறது, அவர் இதற்கு முன் நடித்து வெளிவந்த ‘ஜில்லா’ திரைப்படமும் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
ஆக, விஜய் ரசிகர்களுக்கு இந்த தீபாவளிக்கு ‘டபுள் ட்ரீட்’ கிடைத்துள்ளது.