டீகே இயக்கும் அடுத்த படம்…

Yamirukka Bayamey_00010கிருஷ்ணா, கருணாகரன், ஓவியா, ரூபா மஞ்சரி ஆகியோர் நடித்து வெளிவந்த வெற்றிகரமாக ஓடிய ‘யாமிருக்க பயமே’ படத்தை இயக்கிய டீகே அடுத்து ஒரு புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.

இந்தப் படத்தை ‘யாமிருக்க பயமே’ படத்தைத் தயாரித்த ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனமே தயாரிக்கிறது. படத்தைப் பற்றித் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் கூறுகையில்,

“எங்களது நிறுவனத்திலிருந்து 2015ம் ஆண்டில் பல நல்ல தரமான படங்களைத் தயாரிக்க உள்ளோம். அதில் முதல் தயாரிப்பாக டீகே இயக்கும் படத்தைத் தயாரிக்கப் போகிறோம்.

மிகவும் வித்தியாசமான முறையில் வழக்கமான கதையைப் போல இல்லாமல் ஒரு நல்ல கதையை டீகே சொல்லியிருக்கிறார். அந்தக் கதையைக் கேட்டு மிகவும் சிரித்து ரசித்தேன்.

இது அவருடைய முதல் படமான ‘யாமிருக்க பயமே’ படத்தை விட முற்றிலும் வேறுபட்டு இருக்கும். இந்தப் படம் எங்களது தயாரிப்பு நிறுவனத்திற்கும் பெயர் சொல்லும் படமாக கண்டிப்பாக அமையும்,” என்கிறார் எல்ரெட் குமார்.

Read Previous

ஜெய் நடிக்கும் ‘புகழ்’…

Read Next

தனுஷ் ஜோடியாக எமி ஜாக்சன்…