பிரபல ஆனந்த விகடன் வார இதழ் கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு ஆண்டும் திரையுலகத்திலும், மற்ற துறைகளிலும் சாதனை புரிபவர்களின் திறமைக்கு மரியாதை கொடுக்கும் விதத்தில் ‘ஆனந்த விகடன் விருதுகள்’ விருது பெற்றவர்களின் பெயரை அறிவித்து அவர்களுக்கு பெருமை சேர்த்து வருகிறது.
அந்த விதத்தில் 2014ம் ஆண்டிற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் திரையுலகத்தினருக்கான விருதுகளைப் பெற்றவர்களின் பட்டியல்…
சிறந்த படம் – சதுரங்க வேட்டை
சிறந்த இயக்குனர் – பா.ரஞ்சித் (மெட்ராஸ்)
சிறந்த நடிகர் – தனுஷ் (வேலையில்லா பட்டதாரி)
சிறந்த நடிகை – மாளவிகா (குக்கூ)
சிறந்த வில்லன் – பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா)
சிறந்த வில்லி – சலோனி லூத்ரா (சரபம்)
சிறந்த குணச்சித்திர நடிகர் – கலையரசன் (மெட்ராஸ்)
சிறந்த குணச்சித்திர நடிகர் – சரண்யா பொன்வண்ணன் (என்னமோ நடக்குது, வேலையில்லா பட்டதாரி)
சிறந்த நகைச்சுவை நடிகர் – தம்பி ராமையா (கதை திரைக்கதை வசனம் இயக்கம்)
சிறந்த நகைச்சுவை நடிகை – கோவை சரளா (அரண்மனை)
சிறந்த புதுமுக இயக்குனர் – ராம்குமார் (முண்டாசுபட்டி)
சிறந்த புதுமுக நடிகர் – துல்கர் சல்மான் (வாயை மூடி பேசவும்)
சிறந்த புதுமுக நடிகை – கேத்தரின் தெரேசா (மெட்ராஸ்)
சிறந்த இசையமைப்பாளர் – சந்தோஷ் நாராயணன் (குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ்)
சிறந்த ஒளிப்பதிவாளர் – கேவ்மிக் யு ஆரி (ஜிகர்தண்டா)
சிறந்த படத்தொகுப்பாளர் – ராஜா முகமது (ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்)
சிறந்த கதையாசிரியர் – பா.ரஞ்சித் (மெட்ராஸ்)
சிறந்த திரைக்கதையாசிரியர் – மிஷ்கின் (பிசாசு)
சிறந்த வசனம் – ராஜு முருகன், ஆ.பரமு (குக்கூ)
சிறந்த கலை இயக்குனர் – சி.ஆர்.வேலு (ஆஹா கல்யாணம்)
சிறந்த ஒப்பனையாளர் – பட்டணம் ரஷீத் ( காவியத் தலைவன்)
சிறந்த நடன இயக்குனர் – ஷோபி (பக்கம் வந்து…. – கத்தி)
சிறந்த சண்டைப் பயிற்சியாளர் – சுப்ரீம் சுந்தர் – (கோலி சோடா)
சிறந்த ஆடை வடிவமைப்பாளர் – சத்யா, சயாம் சூத் (மான் கராத்தே)
சிறந்த பாடலாசிரியர் – யுகபாரதி (குக்கூ)
சிறந்த பின்னணிப் பாடகர் – பிரதீப் குமார் (ஆகாயம் தீப்பிடிச்ச… – மெட்ராஸ்)
சிறந்த பின்னணிப் பாடகி – சக்தி ஸ்ரீ கோபாலன் ( நான் நீ நாம் வாழவே… – மெட்ராஸ்)
சிறந்த தயாரிப்பு – கேம்பர் சினிமா (ராமானுஜன்)
ஆகிய விருதுகளை அறிவித்துள்ளனர்.