‘புலி’ ஆகஸ்ட் 15ல் ரிலீஸ்…?

actor vijayசிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப், பிரபு மற்றும் பலர் நடிப்பில் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் படம் ‘புலி’.

கடந்த மூன்று மாதங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. விரைவில் வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

இந்தப் படம் ஒரு ஃபேன்டஸியான படம். இதுவரை தமிழ்த் திரையுலகில் இப்படி ஒரு கதையும், படமும் வந்ததில்லை என்று சொல்லுமளவிற்கு படமாக்கி வருகிறார்களாம்.

விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு எப்படியும் ஏப்ரல் மாதத்தில் முடிந்து விடுமாம். அதன் பிறகு படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் முடிந்து வெளியாவதற்கு ஆகஸ்ட் ஆகி விடும் என்கிறார்கள்.

வினியோகஸ்தர்கள் பலரும் படத்தை ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று சொல்வதாகவும், அதனால் படத்தை அதற்கு முன்னர் வெளியிட மாட்டார்கள் என்றும் சொல்கிறார்கள்.

படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகள், பின்னணி இசைச் சேர்ப்பு ஆகியவையால் ஆகஸ்ட் 15க்குத்தான் படமும் தயாராகும் என்கிறார்கள்.

Read Previous

1500 படங்களுக்கு இசையமைத்துள்ள சங்கர் – கணேஷ்

Read Next

‘என்னை அறிந்தால்’ – 100 கோடி வசூல்…