பா.மீனாட்சி சுந்தரம் – புதிய பாடலாசிரியர்…

pa meenakshi sundaramஇயக்குனர் ஜெயம் ராஜா, காதல் மன்னன் மானு நடித்த ‘என்ன சத்தம் இந்த நேரம்’ திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் பா.மீனாட்சிசுந்தரம். இவர் பாடலாசிரியர் பா.விஜய்யிடம் பத்தாண்டுகள் உதவியாளராக இருந்தவர்.

தற்போது, ‘ராட்டினம்’ திரைப்படத்தின் இயக்குனர் கே.எஸ்.தங்கசாமியின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் ‘எட்டுத் திக்கும் மதயானை’ திரைப்படத்தில் ‘நெல்லைச் சீமை இது… நெல்வேலி பூமி இது’ என்று திருநெல்வேலியின் பெருமைகளைச் சொல்லும் பாடலை எழுதியிருக்கிறார். இது முழுக்க முழுக்க நெல்லை வட்டார வழக்கிலேயே எழுதப்பட்டுள்ளது.

இப்படத்தைத் “காட்டுமல்லி, லொடுக்கு பாண்டி, மெய் மறந்தேன், தாட்டியன், கொட்டாங்குச்சி, யாவும் காதலே, கலைவாணர் நாடக மன்றம், காத்து, தம்பி வீரபாண்டியன் என பத்துக்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களை எழுதி வருகிறார்.

‘தாவணி வீதி தடை செய்யப்பட்ட பகுதி’ எனும் காதல் கவிதை தொகுப்பையும், ‘பட்டாம்பூச்சி வாசம்’ எனும் கவிதைத் தொகுப்பையு வெளியிட்டுள்ளார். விரைவில் முத்தங்கள் சார்ந்த ‘மையல் நேரத்துத் தேநீர்’ எனும் கவிதைத் தொகுதியை வெளியிட திட்டமிட்டுள்ளார்.

Read Previous

’ஓ காதல் கண்மணி’ ஆன ‘ஓகே கண்மணி’…

Read Next

மார்ச் 1-ல் ‘உத்தம வில்லன்’ இசை விழா…