ஜெயம் சினி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் D.ரவிகுமார் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் ‘நட்பதிகாரம் – 79’. இந்த படத்தில் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தில் நடித்துள்ள ராஜ்பரத் கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயனாக ‘வல்லினம்’ படத்தில் நடித்த அம்ஜத் கான் நடிக்கிறார். கதாநாயகிகளாக ரேஷ்மி மற்றும் தேஜஸ்வி நடிக்கிறார்கள்.
இப்படத்திற்காக இசையமைப்பாளர் தீபக் நீலம்பூர் இசையில், இசையமைப்பாளர் தேவா ஒரு பாடலைப் பாடியுள்ளார்.
“சொல்லு சொல்லு
சொல்லம்மா – நீ
உண்மை உண்மை சொல்லம்மா” என்ற அந்தப் பாடல் காட்சி ராஜுசுந்தரம் மற்றும் கதாநாயகர்களான ராஜ்பரத் – அம்ஜத், மற்றும் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் ஆகியோர் ஆடிப்பாட படமாக்கப் பட்டது.
படம் பற்றி இயக்குனர் ரவிச்சந்திரன் கூறியதாவது,
“நான் இயக்கிய மஜ்னு, கண்ணெதிரே தோன்றினாள், சந்தித்த வேளை, உற்சாகம் போன்ற படங்களிலிருந்து இப் படம் முற்றிலும் மாறுபட்டது. நட்பின் பெருமையை சொல்லும் படம் இது.மிகப் பிரமாண்டமான முறையில் இப் படம் உருவாகி வருகிறது.
இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களை குஷிப்படுத்தும் படமாக இது இருக்கும். விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது,” என்றார் இயக்குனர் ரவிச்சந்திரன்.