விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நாயகனாக அறிமுகமாகும் ‘சகாப்தம்’ இன்று உலகம் முழுவதும் வெளியானது.
இன்று காலை சென்னையில் பத்திரிகையாளர்களுக்காக திரையிடப்பட்ட காட்சியில் விஜயகாந்தும் பத்திரிகையாளர்களுடன் அமர்ந்து முழு படத்தையும் பார்த்து ரசித்து, எனக்கு இதுவரை நிறையவே ஆதரவு தந்துள்ளீர்கள். இனி சினிமாவில் என்னுடைய மகன் முன்னுக்கு வரவேண்டும். அதனால் அவருக்கும் உங்களது ஆதரவை தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
படத்தின் தயாரிப்பாளர் எல்.கே.சுதீஷ், இயக்குனர் சுரேந்திரன், நாயகன் சண்முகப்பாண்டியன், படத்தில் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பவர் ஸ்டார், மற்றும் ராஜேந்திரநாத், சண்முகராஜன், தலைவாசல் விஜய் ஆகியோரும் படத்தைப் பார்த்தனர்.
முன்னதாக விஜயகாந்திற்கும் படத்தின் கலைஞர்களுக்கு தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர்கள் மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.