‘கொம்பன்’ படம் தடைகளை தகர்த்தெறிந்து நேற்று மாலையே வெளியானது. அப்போதே பல திரையரங்குகளில் படத்தைப் பார்க்க ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் தியேட்டர்களுக்கு திரண்டு வந்திருந்தனர்.
வெளியான அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்களின் அமோக வரவேற்புடன் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகியிருப்பதாக தமிழ்நாடு முழுவதும் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றும் அந்த வரவேற்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. அடுத்து மூன்று நாட்கள் விடுமுறை தினம் என்பதால் இந்த வார முடிவிற்குள் ‘கொம்பன்’ படத்தின் வசூல் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று திரையுலகத்தினரே தெரிவிக்கிறார்கள்.
‘கொம்பன்’ படம் குடும்பத்துடன் வந்து பார்க்கும்படியாக இருப்பதே இந்த வரவேற்புக்குக் காரணம் என்கிறார்கள்.