திருவிளையாடல் – டிஜிட்டல் வடிவில் மறு வெளியீடு
1965ஆம் ஆண்டு வெளியான பழம்பெரும் தமிழ் திரைப்படமான ‘திருவிளையாடல்’, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பொலிவுடன் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில், சிவாஜி கணேசன் உள்ளிட்ட முன்னணி கலைஞர்களின் சிறப்பான நடிப்பில் உருவான திருவிளையாடல், தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்புகளில் ஒன்றாகத் திகழ்கிறது. திருவிளையாடற் புராணத்தை அடிப்படையாகக் கொண்டு…