பல புதுப் புது இயக்குனர்களும், நடிகர்களும், சினிமா ஆர்வமுள்ள திறமைசாலிகளும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிலர்தான் ரசிகர்களின் ரசனைக்கேற்ப படங்களைக் கொடுக்கிறார்கள். இந்த ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தை ரசிகர்களின் ரசனைக்கேற்றபடி கலகலப்பாகக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் அப்பாஸ் அக்பர்.
கதை
சினிமாவில் இயக்குனராக அறிமுகமாக வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறார் கோகுல் ஆனந்த். ஒரு தயாரிப்பாளரால் ஏமாற்றத்தைச் சந்திக்கும் அவர் நண்பனின் உதவியால், சிங்கப்பூருக்கு ஒரு தயாரிப்பாளரைச் சந்தித்து கதை சொல்லப் போகிறார். போன இடத்தில் தயாரிப்பாளரைச் சந்திக்க முடியாமல் விதி, அவருக்கு சதி செய்கிறது. பாஸ்போர்ட்டையும் தொலைத்து விடுகிறார், பணத்தையும் பறி கொடுக்கிறார். அதன் பின் அங்கு ஒரு டிவியில் ஒளிப்பதிவாளராக வேலை பார்க்கும் ராஜேஷ் பாலச்சந்திரன் , கோகுல் ஆனந்திற்கு அடைக்கலம் கொடுக்கிறார். அவரது தயவால் வேறொரு தயாரிப்பாளரையும் சந்திக்கிறார். அந்த சமயத்தில் கோகுலுக்குள் காதல் மலர்கிறது. அதனால், சில பிரச்சனைகளும் வருகிறது. அதிலிருந்து மீண்டும் படம் இயக்கினரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
இயக்கம்
அறிமுக இயக்குனர் அப்பாஸ் அக்பர், காதல், நகைச்சுவை, சென்டிமென்ட் இவை அனைத்தையும் சரியான விகிதத்தில் கலந்து கொடுத்திருக்கிறார். புதுமுகங்கள் நடித்தாலும் சுவாரசியமான விதத்தில் கதையை சொல்லியிருப்பது படத்தை ரசிக்க வைக்கிறது.
நடிப்பு
படத்தில் நாயகனாக கோகுல் ஆனந்த். அறிமுக நாயகன் என்று சொல்ல முடியாதபடி முதல் படத்திலேயே நடிப்புக்கு அதிக வாய்ப்புள்ள கதாபாத்திரத்தை ஏற்று நிறைவாக நடித்திருக்கிறார். அவக்கு சிங்கப்பூரிர் அடைக்கலம் கொடுப்பவராக நடித்திருக்கும் ராஜேஷ் பாலச்சந்திரன், நகைச்சுவை நடிப்பில் தனி முத்திரை பதிக்கிறார். சில காட்சிகளில் கொஞ்சம் ஓவராகவே நடிக்கிறார். அஞ்சு குரியன் படம் முழுவதும் அழுது கொண்டுதான் இருக்கிறார்.
இசை
ஜிப்ரான் தயாரித்து இசையமைத்திருக்கும் படம். “வாடி…வாடி, போகாதே….” பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.
படத்திற்கு +
ஒரு பயணம் போல படம் அதன் போக்கில் அப்படியே நகர்ந்து போகிறது.
படத்திற்கு –
திருப்புமுனைகள் எதுவும் இல்லாத சராசரியான திரைக்கதை