11 விதமான தோற்றங்களில் யோகி பாபு

மனோன்ஸ் சினி கம்பைன் சார்பில் ஆருரான் தயாரிக்க புகழ்மணி வசனம், இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘காவி ஆவி நடுவுல தேவி’.

கதாநாயகனாக ராம் சுந்தர்அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார்.

மற்றும் யோகி பாபு, தம்பி ராமையா, நான் கடவுள் ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, சிவசங்கர், வேல் சிவா, ரிஷா, சிவகாமி, வாணி, டக்ளா ராமு மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் பிரமிப்பூட்டும் வகையில் தயாராகி வருகிறதாம்.

“காதலை சேர்த்து வைக்கும் கேரக்டரில் வரும் யோகிபாபு, அதற்காக பதினொரு விதமான கெட்டப்புகளில் வந்து நகைச்சுவையை அள்ளித் தெளித்திருக்கிறார். நான் கடவுள் ராஜேந்திரனும், அவருக்கு துணையாக மலையாள மாந்திரீகனாக இமான் அண்ணாச்சியும் அடிக்கும் லூட்டிகள் நகைச்சுவையில் மேலும் கலக்கும். தம்பி ராமையா வரும் காட்சிகள் அனைத்தும் அதிரடி காமெடியாக இருக்கும்,” என்கிறார் இப் படத்தின் கதாசிரியரான வி.சி.குகநாதன் .

இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.

Read Previous

‘அருவம்’, எனக்குப் பொருத்தமான கதாபாத்திரம் – சித்தார்த்

Read Next

பப்பி – மொரட்டு சிங்கிள்களுக்கு சமர்ப்பணம்

Most Popular