பா.ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடிக்கும் ‘ரைட்டர்’

நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பாக பா.ரஞ்சித் தயாரிக்க, பிராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் படம் ‘ரைட்டர்’.  

‘பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படங்களைத் தொடர்ந்து தன்னிடம் உதவியாளராக இருந்த பிராங்ளின் ஜேக்கப்பை இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்துகிறார் ரஞ்சித்.  

கோல்டன் ரேசியோ பிலிம்ஸ், லிட்டில் ரெட் கார் , மற்றும் ஜெற்றி புரொடக்சன்ஸ்  தயாரிப்பு நிறுவனங்களோடு இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார் ரஞ்சித்.

சமுத்திரக்கனி இந்த படத்தில் காவல்துறையில் பணிபுறியும் ரைட்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதிகார மையத்தில் பணிபுரியும்  ஒரு எளிய மனிதனாக இயல்பான வாழ்வை வாழ்பவராக நடித்திருக்கிறார்.

ஹரிகிருஷ்ணன், இனியா, இயக்குனர் சுப்ரமணியம் சிவா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்

வழக்கமான சமுத்திரக்கனியை இந்தப்படத்தில் பார்க்கமுடியாது, இது அவரது சினிமா பயணத்தில் மிக முக்கியமான படமாக இருக்கும் என்கிறார் இயக்குனர் பிராங்ளின்.

கோவிந்த் வசந்தா இசையமைக்க யுகபாரதி, முத்துவேல் பாடல்கள் எழுதுகிறார்கள். 

Read Previous

இயக்குனர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் மரணம்

Read Next

ஸ்டார் விஜய் டிவியில் ‘BB ஜோடிகள்’, புதிய நடன ரியாலிட்டி ஷோ

Most Popular