முதல்வரை சந்தித்த ‘வித் லவ்’ தயாரிப்பாளர்கள்

திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘வித் லவ்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.

சியோன் பிலிம்ஸ் சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் பசிலியான் நாசரேத் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில் உருவான இப்படம், வெளியான நாளிலிருந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த வெற்றியின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் தயாரிப்பாளர்கள்  தமிழக முதல்வரைச் சந்தித்தனர்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தயாரிப்பாளர்களுடன் சிறிது நேரம் உரையாடி, ‘வித் லவ்’ திரைப்படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, படக்குழுவின் முயற்சியையும் பாராட்டினார். இந்த சந்திப்பு படக்குழுவினருக்கு மேலும் உற்சாகம் அளித்துள்ளது.

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடித்துள்ள ‘வித் லவ்’, இன்றைய இளைஞர்களின் உலகம், அவர்களின் உணர்வுகள் மற்றும் காதலை மையமாக வைத்து உருவான இப்படம், ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் விமர்சகர்களிடமும் பாராட்டுகளை குவித்துள்ளது.

‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன், இப்படத்தின் இயக்குநராக அறிமுகமாகி, தனது நேர்த்தியான கதை சொல்லலால் கவனம் ஈர்த்துள்ளார்.

 

Read Previous

மரகத நாணயம் 2, பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்

Read Next

‘டபுள் ஆக்குபன்சி’ படப்பிடிப்பு நிறைவு

Most Popular