விக்ரம் 58 படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

2006 ஆம் ஆண்டு, லாகூர் நகரத்தில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களை வீழ்த்தி, ஹாட்ரிக் எடுத்து சாதனை புரிந்தவர் இர்பான்.

‘டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள்’ ஆகிய இரண்டு வெற்றி படங்களைக் கொடுத்தவர் இப்படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து.

ஏஆர் ரகுமான் இசையமைக்கும் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியான போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் மேலும் ஒரு எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் பல வெளிநாடுகளிலும் இந்தியாவின் பல இடங்களிலும் படமாக்கப்பட இருக்கிறது.

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்தில் பணியாற்ற இருக்கும் மற்ற கலைஞர்களின் விவரங்களை படக்குழுவினர் விரைவில் அறிவிக்க உள்ளனர்.

Read Previous

பப்பி – விமர்சனம்

Read Next

சேரனை ராஜாவாக்க வரும் ‘ராஜாவுக்கு செக்’

Most Popular