’விடுதலை 2’ அப்டேட்: இளம் விஜய்சேதுபதிக்கான திட்டமிடல்

’விடுதலை 2’ படத்தில் இளம் வயது விஜய் சேதுபதிக்காக புதிய திட்டமொன்றை உறுதி செய்திருக்கிறார் வெற்றிமாறன்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘விடுதலை’. இந்தப் படத்தின் கதை இன்னும் முடிவடையாத காரணத்தினால் 2-ம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

’விடுதலை 2’ படத்தையாவது உடனடியாக முடித்து வெளியிடுவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், தொடர்ச்சியாக பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் எதுவுமே திட்டமிடப்படவில்லை.

இதற்கு காரணம் என்னவென்று விசாரித்தால், படத்தில் இளம் வயது விஜய் சேதுபதி காட்சிகள் 10 நிமிடங்கள் வரவுள்ளது. இதற்கு என்ன பண்ணலாம் என்றெல்லாம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால், தயாரிப்பாளரோ DEAGING தொழில்நுட்பம் மூலம் பண்ணுங்கள் என்று கூறியிருக்கிறார்.

இதற்கு கோடிகளில் செலவாகுமே என்றெல்லாம் தெரிவித்தும், படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது அதை பூர்த்தி பண்ணவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இதனால், அமெரிக்காவில் உள்ள நிறுவனத்திடம் பேசியிருக்கிறார்கள். இதற்காக விரைவில் வெற்றிமாறன் – விஜய் சேதுபதி இருவருமே அமெரிக்காவுக்கு பயணிக்க இருக்கிறார்கள். எப்போதுமே அதிகமாக தொழில்நுட்பத்தை நம்பாத வெற்றிமாறன், இந்தப் படத்திற்காக சம்மதம் தெரிவித்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

Read Previous

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குநரின் அடுத்த படம்

Read Next

‘கோட்’ ரிலீஸ்: படக்குழுவினரின் திட்டம் என்ன?

Most Popular