’விடாமுயற்சி’ படப்பிடிப்பு, அஜித் அப்செட்

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பினால் அஜித் பயங்கர அப்செட்டில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விடாமுயற்சி’. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் நீண்ட மாதங்களாக தயாரிப்பில் இருக்கிறது. இதன் படப்பிடிப்பு முழுக்க அஜர்பைஜானில் நடைபெற்றுள்ளது.

இதுவரை எடுத்த காட்சிகள் அனைத்தையும் எடிட் செய்து பார்த்திருக்கிறார்கள். சுமார் ஒன்றரை மணி நேரம் காட்சிகள் மட்டுமே வந்திருக்கிறது. இதற்கு மேல் இன்னும் படமாக்க வேண்டியவை என்று பெரிய லிஸ்ட் ஒன்றைக் கொடுத்துள்ளார் மகிழ் திருமேனி.

இவ்வளவு நாட்கள் படப்பிடிப்பு நடத்தியும், இவ்வளவு தான் காட்சிகளா என்று அஜித் மற்றும் லைகா இருவருமே பயங்கர அப்செட். தற்போது அஜர்பைஜானில் பனிப்பொழிவு குறைந்துவிட்டதால், இறுதிகட்டப் படப்பிடிப்பு தொடங்கவுள்ளனர். ஏப்ரல் 19-ம் தேதி இரவு கிளம்பும் படக்குழு, ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டுத் தான் திரும்ப வேண்டும் என முடிவு செய்துள்ளது.

ஒவ்வொரு படத்தின் இயக்குநரையும் அஜித்துக்கு பிடித்துவிட்டால், உடனடியாக மீண்டும் இணைந்து பணிபுரிவார்கள். ஆனால், அந்த லிஸ்ட்டில் மகிழ்திருமேனி இல்லை என்கிறார்கள். மேலும், ஜூன் மாதம் முதல் ‘குட் பேட் அக்லி’ படத்துக்கு தேதிகள் கொடுக்க இருப்பதால் அஜித் விரைவில் இந்தப் படத்தினை முடித்துவிடுவார் என்கிறது அவருக்கு நெருங்கிய வட்டாரம்.

Read Previous

ப்ரதீப் ரங்கநாதனின் புதிய படம்

Read Next

‘விஜய் 69’ படத்திலிருந்து டிவிவி நிறுவனம் விலகல்

Most Popular